செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 90 வயதுக்கு மேற்பட்ட 27 கொரோனா நோயாளிகள் பூரண குணம்

சென்னை, அக்.17-

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கொரோனா தொற்று பாதிப்புடன், நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசம் செயலிழப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 99 வயது மூதாட்டி உள்பட 90 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்கள் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து டாக்டர் தேரணிராஜன் கூறும்போது, ‘தற்போது மருத்துவமனையில் 756 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 376 பேர் கொரோனா அறிகுறியுடனும், 380 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளனர். இதில் 100 வயது முதியவர் உள்பட 90 வயதுக்கு மேற்பட்ட 27 முதியவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். டாக்டர்கள், செவிலியர்களின் சிறப்பான சேவையினால் நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர். அவர்களின் சேவை பாராட்டுதலுக்குறியது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *