செய்திகள் போஸ்டர் செய்தி

27 புதிய காவல் நிலையங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

சட்டசபையில் காவல்துறைக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகள்

பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம்

பணியின்போது வீரதீர செயலில் மரணமடைந்தால் ரூ.15 லட்சம்

* ரூ.70 கோடியில் புதிய வாகனங்கள்

* கோவையில் ரூ.17 கோடியில் 1400 சிசிடிவி காமிராக்கள்

* திருப்பூரில் ரூ.12 கோடியில் 1200 காமிராக்கள்

 

சென்னை, மார்ச் 25–

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 27 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறையில் அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டசபையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

* காவல் ஆளிநர்களின் மிகை நேரப்பணிக்கான மதிப்பூதியம் ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.160.34 கோடி செலவாகும்.

* புது டெல்லியில் உள்ள த.சி.கா 8-வது அணியில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் (சமையலர், முடிதிருத்துவோர், சலவையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள்) அனைவருக்கும் நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குளிர்காலப் படியைப்போல ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 10 விழுக்காடு, அல்லது அதிகபட்சமாக ரூ.1,500 – என 4 மாதங்களுக்கு வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.69.18 கோடி செலவாகும்.

ஊர்க்காவல் படையினருக்கு ஒரு வருடத்திற்கு கூடுதலாக இரண்டு மாத அழைப்பு நாள்கள் வழங்குவதற்கான ஒப்பளிப்பு. இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10.50 கோடி செலவாகும்.

* காவல் ஆளினர்கள் பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு மரணமடைபவர்களுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து 15 இலட்சமாகவும், நிரந்தர, மொத்தமாக ஊனமுற்றவர்களுக்கு ரூ.4 லட்சத்திலிருந்து 8 லட்சமாகவும், மருத்துவக்காரணங்களுக்காக ஒரு கண், கால் விரல்பகுதி, விரல்கள், போன்ற பகுதி துண்டிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும், துப்பாக்கி சூட்டில் ஒன்றிணைந்த பல உடல்பகுதிகள் சேதமடைதல், உடைபடுதலுக்கு வழங்கப்படும் உதவி தொகை. ரூ.1 லட்சத்திலிருந்து 3 லட்சமாகவும், சிறுகாயங்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் கருணைத்தொகையை, உயர்த்தி வழங்கப்படும்

புதிய காவல் மாவட்டம்

* சென்னை பெருநகர் பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம் ரூ.49.06 லட்சம் செலவில் உருவாக்கப்படும்

* திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் புதிய காவல் உட்கோட்டம் ரூ.47.10 லட்சம் செலவில் உருவாக்கப்படும்

* கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், பில்லூர் அணை மற்றும் சிறுமுகை காவல் நிலையம் உள்ளடக்கிய மேட்டுப்பாளையம் புதிய காவல் உட்கோட்டம் செலவில் ரூ.48.16 லட்சம் உருவாக்கப்படும்

27 காவல் நிலையங்கள்

* மதுரை மாநகரம் கோச்சடையில் புதிய கனவகை காவல் நிலையம் ரூ.6.08 கோடி செலவில் உருவாக்கப்படும்

* மதுரை மாநகரம் அனுப்பானடியில் புதிய கனவகை காவல் நிலையம் ரூ.6.08 கோடி செலவில் உருவாக்கப்படும்

* விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் புதிய மிதவகை காவல் நிலையம் ரூ.3.70 கோடி செலவில் உருவாக்கப்படும்

* திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் புதிய இலகுவகை காவல் நிலையம் ரூ.2.15 கோடி செலவில் உருவாக்கப்படும்

* தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்தை பிரித்து மாட்லம்பட்டி புதிய மிதவகை காவல் நிலையம் ரூ.3.70 கோடி செலவில் உருவாக்கப்படும்

* கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தை பிரித்து களமருதூர் புதிய இலகுவகை காவல் நிலையம் ரூ.2.16 கோடி செலவில் உருவாக்கப்படும்

* விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தை பிரித்து அரசூர் புதிய இலகுவகை காவல் நிலையம் ரூ.2.18 கோடி செலவில் உருவாக்கப்படும்

வானகரம் காவல் நிலையம்

* சென்னை பெருநகர காவல், டி–-4 மதுரவாயல் காவல் நிலையம் மற்றும் டி–-13 குன்றத்தூர் காவல் நிலையம் ஆகியவைகளை பிரித்து வானகரம் காவல் நிலையம் மற்றும் திருமுடிவாக்கம் காவல் நிலையம் என இரண்டு புதிய காவல் நிலையங்கள் ரூ.19.66 கோடி செலவில் உருவாக்கப்படும்

* பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் தாலூகா காவல் நிலையத்தை பிரித்து அம்மாபாளையம் புதிய மிதவகை காவல் நிலையம் ரூ.3.69 கோடி செலவில் உருவாக்கப்படும்.

* மதுரை மாநகரில் அண்ணாநகர், கூடல்புதூர், திருநகர் மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய 4 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் ரூ.5.52 கோடி செலவில் உருவாக்கப்படும்.

* தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்துக் காவல் நிலையம் ரூ.1.34 கோடி செலவில் உருவாக்கப்படும்.

* தென்காசி மாவட்டம் புளியங்குடி போக்குவரத்துக் காவல் நிலையம் ரூ.1.34 கோடி செலவில் உருவாக்கப்படும்.

* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போக்குவரத்துக் காவல் நிலையம் ரூ.1.34 கோடி செலவில் உருவாக்கப்படும்.

* மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளுக்காகப் புதிதாக 10 புறக்காவல் நிலையங்கள் உள்ளடக்கிய காவல் நிலைங்கள் ரூ.12.21 கோடி செலவில் உருவாக்கப்படும்.

காவல் நிலையங்களை தரம் உயர்த்துதல்

* 12 புறக்காவல் நிலையங்களை முழுநேர காவல் நிலையமாக ரூ.21.49 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இயங்கி வரும் கனவகை காவல் நிலையத்தினை மெட்ரோ வகை காவல் நிலையமாக ரூ.6.61 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

* மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்குடி, அகஸ்டின்பட்டி, சாப்டூர், கீழவளவு, காடுபட்டி, அப்பன்திருப்பதி, மேலவளவு ஆகிய உதவி ஆய்வாளர் நிலையில் உள்ள காவல் நிலையங்களை ஆய்வாளர் நிலையிலான காவல் நிலையமாக ரூ.1.06 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

ஆயுதப்படைக்கு புதிய படைப்பிரிவு

* ரூ.14.29 கோடி செலவில் சேலம் மாநகர ஆயுதப்படையில் ஒரு தலைமையகப் படைப்பிரிவும், 2 செயல் படைப்பிரிவுகளும் 186 பணியாளர் எண்ணிக்கை கொண்டு உருவாக்கப்படும்.

* ரூ.4.76 கோடி செலவில் கரூர் மாவட்ட ஆயுதப்படைப்பிரிவில் கூடுதலாக ஒரு செயல் படைப்பிரிவு 62 பணியாளர் எண்ணிக்கை கொண்டு உருவாக்கப்படும்.

புதிய பதவிகள்

* ரூ.26.90 லட்சம் செலவில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) பதவி உருவாக்கப்படும்.

* ரூ.29.49 லட்சம் செலவில் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (அலுவலக தானியங்கல் மற்றும் கணினிமயமாக்கல்) பதவி உருவாக்கப்படும்.

* ரூ.11.74 கோடி செலவில் 6 மாநகரங்களில் (திருச்சி, மதுரை, கோயமுத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி) 53 சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு (குற்றம்) பிரிவு காவல் ஆய்வாளர்கள் பதவி உருவாக்கப்படும்.

* ரூ.28.72 லட்சம் செலவில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகர உட்கோட்டத்தில் ஒரு புதிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதவி உருவாக்கப்படும்.

* ரூ.21.16 லட்சம் செலவில் கரூர் மாவட்டத்தில் தாந்தோணியில் காவல் நிலையத்தில் ஒரு புதிய காவல் ஆய்வாளர் பதவி உருவாக்கப்படும்.

* ரூ.16.09 கோடி செலவில் காவல் உட்கோட்டங்களில் 248 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

சிறப்பு நுண்ணறிவு பிரிவு

* ரூ.75 கோடி செலவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை முறைமையை உருவாக்கப்படும் (போக்குவரத்து சாலை பாதுகாப்பு நிதியம்) (சீர்மிகு நகரம்-தகவல் தொழில்நுட்பம்)

* ரூ.7.56 கோடி செலவில் திருப்பூர் மாநகரம், திருநெல்வேலி மாநகரம், சேலம் மாநகரம் மற்றும் திருச்சி மாநகரங்களில் சிறப்பு நுண்ணறிவு அலகுகள் உருவாக்கப்படும். புதிய வாகனங்கள்

* ரூ.70.14 கோடி செலவில் காவல் துறையில் வாகன வசதியை மேம்படுத்துவதற்காக 918 கழிவு வாகனங்களுக்கு பதிலாகப் புதியதாக 908 மாற்று வாகனங்கள் வாங்கப்படும் (கார் 57, ஈப்பு ஊர்தி 32, பெரிய ஈப்பு ஊர்தி 48, பேருந்து 4, சிறிய பேருந்து 18, வேன் 172, இருசக்கர வாகனம் 525, லாரி 31, கைதிகளுக்கான வாகனம் 2, மீட்பு ஊர்தி 18, பிக்கப் வேன் 1)

புதிய உபகரணங்கள்

* ரூ.55.22 லட்சம் செலவில் சிறப்புப் பிரிவுகளுக்கு (குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு) 96 கணினிகள் மற்றும் அச்சுப் பொறிகள் கொள்முதல் செய்யப்படும்

* குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஆகியவற்றிலுள்ள 151 புலன் விசாரணை அலுவலர்களுக்கு ரூ.60.85 லட்சம் செலவில் மடிக் கணினிகள் கொள்முதல் செய்யப்படும்

* த.சி.கா முதலாம் அணி, திருச்சி மற்றும் இரண்டாம் அணி, ஆவடி ஆகிய இடங்களில் உள்ள காவலர் மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்த நவீன மருத்துவ உபகரணங்கள் ரூ.35 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்

* 11 சரகங்கள் மற்றும் 7 ஆணையரகங்களுக்கு, எடுத்துச்செல்லத்தக்க ஊடுகதிர் உடமை கருவி ரூ.2.70 கோடி செலவில் வாங்கப்படும்

* ரூ.70.76 லட்சம் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம், ஒத்திவாக்கத்திலுள்ள தமிழ்நாடு அதிரடிப் படைப் பள்ளிக்கென உபகரணங்கள் வாங்கப்படும்.

எல்லை வரையறை

* கோயமுத்தூர் மாவட்டம், 8 ஊராட்சி தாய் கிராமங்களில் உள்ள 24 குக்கிராமங்களை நெகமம் காவல் நிலையத்திலிருந்து பிரித்து சுல்தான்பேட்டையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள காவல் நிலையத்துடன் இணைக்கப்படும்

* சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், மதுரை மற்றும் திருநெல்வேலி காவல் ஆணையரகங்களில் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ரூ.3.52 கோடி செலவில் உருவாக்கப்படும்.

கோவையில் 1400 சிசிடிவி காமிரா

* சிறப்புப் பழுது பார்த்தல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.25 கோடியில் இருந்து ரூ.50 கோடியாக உயர்த்தப்படுதல்.

* 1400 எண்ணிக்கையிலான சிசிடிவியை கோயம்புத்தூர் மாநகரில் ரூ.17 கோடி செலவில் பொருத்தப்படும்.

* 1200 எண்ணிக்கையிலான சிசிடிவியை திருப்பூர் மாநகரில் ரூ.12 கோடி செலவில் பொருத்தப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *