செய்திகள்

கொரோனா தடுப்பூசி மருத்துகளை 2,600 இடங்களில் சேமிக்க கட்டமைப்பு

கொரோனா தடுப்பூசி மருத்துகளை 2,600 இடங்களில் சேமிக்க கட்டமைப்பு

தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை

சென்னை, டிச.5-

தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா முன் களப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்தை சேமிப்பதற்கான வசதிகள் மேற்படுத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தமிழக மருத்துவ பணிகள் கழகம் என அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆயிரத்து 600 இடங்களில் தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2 கோடிக்கு மேலான கொரோனா தடுப்பு மருந்துகளை உரிய பாதுகாப்புடன் சேமிக்க முடியும். இதனால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *