செய்திகள்

26-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை, செப். 23–

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 26ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

அக்டோபர் மாதம் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் 26–ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 26ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை இந்த சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்வது குறித்து இதில் முடிவு எடுக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டம் கொண்டு வருவதற்கான மசோதா குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிய தொழில்களுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் சம்பந்தமாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.