செய்திகள்

26வது ஆண்டாக மடிப்பாக்கம் சாய் பள்ளியில் அனைத்து மாணவியர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி

சென்னை, ஏப். 20–

சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள சாய் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெளிவந்துள்ள + 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ– மாணவியர்களும் 26வது ஆண்டாக முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது வெளிவந்துள்ள + 2 தேர்விலும் தேர்வு எழுதிய 201 மாணவ– மாணவியர்களும் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதுடன் முதல் வகுப்புக்கு மேல் உயர்மதிப்பெண்கள் பெற்று அந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டி உள்ளனர்.

இந்த தொடர் வெற்றியை கடந்த 25 ஆண்டுகளாக நிகழ்த்தி வரும் மடிப்பாக்கம், சாய் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் தாம்பரம், சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ– மாணவியர்களுக்கும், முதல்வர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரிய– ஆசிரியைகளுக்கும், இதற்கு ஒத்துழைத்த பெற்றோர்களுக்கும் சாய்ராம் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து பாராட்டினார்.

சாய் பள்ளியில் முதலாவதாக வந்த மாணவி வைஷ்ணவி ஆர்– 589/600 மதிப்பெண் பெற்றார். ஓ.லட்சுமி பிரதியுஷா, எம்.அரவிந்த் சகாயன், எச்.விக்னேஷ்வரன் ஆகிய மூன்று பேர் 585 /600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

எம்.மாளவிகா, எஸ்.அகிலா ஆகிய 2 மாணவிகள் 757/600 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்தில் 5 பேர், வணிகவியல் பாடத்தில் 4 பேர், அக்கவுண்டன்சி பாடத்தில் 6 பேர், பொருளாதார பாடத்தில் 2 பேர் என மொத்தம் 17 பேர் 100/ 100 மதிப்பெண்கள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் தாம்பரத்தில் உள்ள சாய் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி + 2 தேர்வில் வி.சபரி மற்றும் எஸ்.சூர்யா ஆகிய இருவரும் 545/ 600 பெற்று முதல் இடத்திலும், பி.சுஜிதா 543/ 600 பெற்று இரண்டாம் இடத்திலும், வி.செல்வக்குமார் 542/ 600 பெற்று மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *