வாழ்வியல்

250 ஆண்டில் 571 தாவரங்கள் முற்றிலும் அழிந்து போனது!

Spread the love

விலங்குகளின் மீதுதான் உலகம் அக்கரை செலுத்துகிறது. தாவரங்களின் மீது அல்ல. ஆம், விலங்குகள் வழக்கொழிந்து போவதைப் பற்றி கவலைப்படும் உலகம், செடி கொடிகள் இனம் அழிவதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

அவ்வளவு ஏன், தாவரவியல் வல்லுநர்கள் கூட வழக்கொழிந்து போன தாவர இனங்களை கணக்கிடுவதில் தவறு செய்திருக்கின்றனர்.

அனைத்துலக இயற்கை பாதுகாப்பு யூனியன் தயாரித்திருக்கும் வழக்கொழிந்துபோன தாவரங்கள் பட்டியலில், கடந்த, 250 ஆண்டுகளில், 571 தாவர இனங்கள் முற்றிலும் அழிந்து போனதாகக் காட்டுகிறது.

ஆனால், லண்டனிலுள்ள தாவரவியல் பூங்காவான கியூ கார்டென்சிலுள்ள வல்லுநர்கள், இந்தக் கணக்கு மிகவும் குறைவானது என்று அடித்துச் சொல்கின்றனர்.

அவர்களது மதிப்பீட்டின்படி, இதைவிட, 500 மடங்கு தாவர இனங்கள் அழிந்து போயிருக்கின்றன.

சிலி நாட்டு சந்தன மரம், சில வகை ஆலிவ் மரம் போன்ற பல தாவரங்கள் பூண்டோடு அழிந்துவிட்டன என்றும், அவை மீண்டும் கண்டறியும் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்றும், வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *