செய்திகள்

2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் 25 சதம் பேருக்கு காது கேட்காது: உலக சுகாதார அமைப்பு தகவல்

நியூயார்க், மார்ச் 2–

2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேளாமை குறைபாடு ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் காது கேளாமை குறைபாடு குறித்து, உலகளாவிய ஆய்வை மேற்கொண்டது. உலகிலேயே காது குறைபாட்டை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வறிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையின்படி, தொற்று நோய்கள், பிறப்பு குறைபாடுகள், வாழ்க்கை முறை தேர்வு, அதிகப்படியான இரைச்சல் ஆகியவை பிரதான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

உலகளாவிய இப்பிரச்சினையை முறையாகக் கையாளவில்லை என்றால் ஆண்டுதோறும் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டு, நாட்டில் பல லட்சம் கோடி நிதி வீணாய் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏழை நாடுகள் அதிகம் பாதிப்பு

தற்போதைய நிலவரப்படி ஐந்தில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது என்கிறது அறிக்கை. 2019ஆம் ஆண்டு 160 கோடி மக்களுக்கு இக்குறைபாடு இருந்ததாகவும், 2050ஆம் ஆண்டில் 250 கோடியாக இது உயரும் என்றும், அதில் 70 கோடி பேருக்கு பாதிப்பு தீவிரத்தன்மையோடு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை 43 கோடியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில் பெரிதும் பாதிக்கப்படுவது குறைந்த வருமானம் கொண்ட ஏழை நாடுகள் தான். முறையான மருத்துவக் கட்டமைப்புள்ள பணக்கார நாடுகளிலேயே காது குறைபாடுகளுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டும் உலக சுகாதார நிறுவனம், ஏழை நாடுகளில் 80 சதவீத மக்கள் காது கேளாமை குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.

ஆதலால் காது தொடர்பான குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை சுகாதாரத் துறையினர் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதேபோல ஒலி இரைச்சலைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், அதனால் ஏற்படும் நிதி இழப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *