செய்திகள்

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் 24 மணி நேர தொடர் கராத்தே நிகழ்ச்சி

Spread the love

சென்னை, டிச. 2

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கு பெற்ற 24 மணி நேர தொடர் கராத்தே நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் பதிவானது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது மற்றும் தற்காப்புக் கலையின் அவசியத்தையும் வலியுறுத்தி சென்னை அடையாறில் உள்ள கராத்தே பயிற்சி மையத்தில் பார்ன் டு பைட் கராத்தே பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் கராத்தே மாஸ்டர் ஐயப்பன் வழிகாட்டுதலில் 24 மணி நேர தொடர் கராத்தே நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 20 பேர் வீதமாகப் பிரிக்கப்பட்ட பல்வேறு குழுவினர், தொடர்ந்து கராத்தே தற்காப்புக் கலையைச் செய்து காட்டினர். 7 வயது முதல் 30 வயது வரையிலுள்ள பள்ளி, சட்டகல்லூரி, ஆடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் பிரிவுகளில் பயிலும் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு காரத்தே கலையை நிகழ்த்திக் காட்டினர். உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்கள் பலரும் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நவம்பர் 29, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி, மறுநாள் 30.11.19 சனிக்கிழமை மாலை 5 மணி வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது. உலக சாதனை மையத்தினரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சோழன் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர், மாணவ, மாணவிகளுக்கு உலக சாதனை சான்றிதழ்களை அதன் நிர்வாகிகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *