டெல்லி, ஜன. 27– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக பதிவாகியுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1896 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,739 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,49,802 […]
புதுடெல்லி, டிச.1- இந்தியாவில் 2030க்குள் ஆண்டுதோறும் 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் என்ற உலக வங்கி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- […]
சபரிமலை, நவ.26- வருகிற 30ந் தேதி வரை சபரிமலையில் தரிசனத்துக்கு 8¾ லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், பக்தர்கள் முக கவசம் அணிய திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மண்டல பூஜைக்காக கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு […]