செய்திகள்

23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை சென்னையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து

Makkal Kural Official

சென்னை, ஜூலை18-

பராமரிப்பு பணி காரணமாக வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12.00, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சரி செல்லும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1.00, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டில் இருந்து காலை 11.00, 11.30 மதியம் 12, இரவு 11.00 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9 30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், கூடுவாஞ்சேரி– – செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்களும், செங்கல்பட்டு– – கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்கள் என மொத்தம் 44 சிறப்பு மின்சார ரெயில்கள் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

* சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.

* மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, மதியம் 12.00, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

* கூடுவாஞ்சேரியில் இருந்து காலை 10.45, 11.10, மதியம் 12.00, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.

* மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1.00, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *