செய்திகள்

21–ந் தேதி சூரியகிரகணம்: பழனி கோவில் பூஜை நேரம் மாற்றம்

பழனி, ஜூன். 16–

வரும் 21–ந் தேதி சூரிய கிரகணத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

பழனி முருகன் மலைக்கோயில் மற்றும் உப கோயில்களில் கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் ஆகம விதிப்படி ஆறுகால பூஜை நடைபெறுகிறது.

வரும் ஜூன் 21–ந் தேதி சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இதையொட்டி பழனி முருகன் கோயில் மற்றும் திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பெரிய ஆவுடையார் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், குழந்தை வேலாயுதசுவாமி கோவில் போன்ற கோயில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் சூரிய கிரகணத்தையொட்டி காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

பின்பு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. 6:40 மணிக்கு விளா பூஜையும் அதைத் தொடர்ந்து சிறு காலசந்தி, பின்பு காலசந்தி பூஜை நடைபெறுகிறது 7:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. சூரிய கிரகணம் முடிந்த பின்பு கோயில் மதியம் 2 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, சம்ரட்சன பூஜை நடைபெறுகிறது. அதன்பின்பு கோயில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *