செய்திகள்

21 ந்தேதி கமல் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழா

சென்னை, பிப்.18-

21 ந்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 7 ஆம் ஆண்டு துவக்க விழா கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பிப்ரவரி 21 ந்தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7 ஆம் ஆண்டு தொடக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், அன்று காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை தலைவர் கமல்ஹாசன் ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

நிர்வாகிகள் பங்கேற்ற வேண்டும்

அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம், நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும் !! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *