ஜார்கண்ட் மருத்துவர்கள் அதிர்ச்சி
ராஞ்சி, நவ. 5–
21 நாள் குழந்தையின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத எட்டு கருக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளது மருத்துவ உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் வயிற்றில், கட்டி இருப்பதை சிடி ஸ்கேன் செய்த போது மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
வளர்ச்சியடையாத 8 கரு
இதனையடுத்து, சிசு வயிற்றில் இருந்து உடனே கட்டிகளை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ராஞ்சி தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் இருப்பது கட்டி அல்ல, கரு என்று கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம், 21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத 8 கருக்களை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில், குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிசு வயிற்றில் 8 கருக்கள் கண்டறியப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது. இது மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.