செய்திகள்

21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

Makkal Kural Official

சென்னை, மார்ச் 20–

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர்.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அண்ணா தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.

முதன்முதலாக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய திமுக, கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கி தொகுதி பங்கீட்டையும் முதலில் நிறைவு செய்தது. அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க.வை பொறுத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது.

தி.மு.க. தரப்பில் ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு, அவர்களிடம் நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையையும் இன்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:–

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

வட சென்னை – கலாநிதி வீராசாமி

ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம் (தனி) – க.செல்வம்

வேலூர் – கதிர்ஆனந்த்

அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

ஆரணி – எம்.எஸ்.தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி – கே.மலையரசன்

தர்மபுரி – ஆ.மணி

கோவை – கணபதி ப. ராஜ்குமார்

பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

சேலம் – டி.எம். செல்வகணபதி

ஈரோடு – பிரகாஷ்

நீலகிரி (தனி) – ஆ.ராசா

தஞ்சாவூர் – ச.முரசொலி

பெரம்பலூர் – அருண் நேரு

தேனி – தங்க தமிழ்செல்வன்

தூத்துக்குடி – கனிமொழி

தென்காசி – ராணி ஸ்ரீகுமார்

இப்பட்டியலில் புதியவர்கள் 11 பேர், பெண்கள் 3 பேர், பட்டதாரிகள் 19 பேர், மருத்துவர்கள் 2, வழக்கறிஞர்கள் 6 பேர் அடங்கும்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *