இந்தியா 76! செய்திகள்

2036 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த விருப்பம்

Makkal Kural Official

டெல்லி, நவ 5

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு ஜோராக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024ம் ஆண்டுகான போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்டது. 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது. 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடக்க உள்ளது. 2036ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை, இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது 140 கோடி இந்தியர்களின் கனவு’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த சூழலில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஒலிம்பிக் போட்டி நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கனவு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *