சென்னை, செப். 22–
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைப்போம் என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார்.
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. பென்ஜமின் பேசியதாவது:-
தி.மு.க. கடந்த தேர்தலில் 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து ஒரு வாக்குறுதிகள் கூடமுழுமையாக அவர்கள் நிறைவேற்றவில்லை. நீட்தேர்வு ரத்து முதல் கையெழுத்தாக போடுவோம் என்று சொன்னார்கள். மூன்றரை ஆண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வையும் ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியத்தையும் சொல்லவில்லை.
ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி உலகத்திலேயே யாருக்கும் உதித்திராத திட்டம் தான் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் விவசாயிகள், ஏழை எளியோரின் குழந்தைகளான மாணவர்களின் மருத்துவப்படிப்புகனவை நிறை வேற்றியவர்.
அதே போல் குடிமராமத்து திட்டத்தினால் விவசாயிகள் மிகவும் பயன்பெற்றனர். டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த எடப்பாடி. அண்ணா தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்தார்.
ஆனால் இன்றைக்கு தி.மு.க. அந்த திட்டத்தினை மக்களை தேடி மருத்துவம் என்று பெயரை மாற்றி, அந்த திட்டத்தை கூட அவர்களால் செயல்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.
இந்த ஆட்சியில் தி.மு.க.வின் சாதனைகள் என்று சொன்னால் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு தான். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி அருகிலேயே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழக மக்களிடம் மிகப்பெரிய வெறுப்பை விடியா தி.மு.க. அரசு சம்பாதித்து விட்டது. கொடுப்பதற்கு என்று ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது கழகம் மட்டும்தான். எடுப்பதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது தி.மு.க.தான். ஆகையால் வருகிற 2026 சட்டமன்றதேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமையும்.
இவ்வாறு பா.பென்ஜமின் பேசினார்.