செய்திகள்

2025-ம் ஆண்டில் 24 அரசு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, நவ. 23–

அடுத்த 2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை​களுடன் 24 நாட்கள் அரசு விடு​முறை நாட்கள் என தமிழக அரசு அறிவித்​துள்ளது.

ஆண்டு​தோறும், தமிழக அரசின் சார்​பில் சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமைகள் அரசு விடு​முறை நாட்கள் தவிர, இதர பொது விடு​முறை நாட்களாக அறிவிக்​கப்​படும். அந்த வகையில், அடுத்த 2025-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை நாட்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, தமிழக அரசின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள அனைத்து அலுவல​கங்​களும் 2025-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை​களும் மூடப்பட வேண்​டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடு​முறை நாட்​களின் விவரங்களும் அறிவிக்​கப்​பட்டுள்ளன.

இதில் ஏப்ரல் 1ம் தேதி திங்கள் கிழமை விடு​முறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கி​களுக்கு மட்டுமே பொருந்​தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்​துறை நிறு​வனங்​கள், கழகங்​கள், வாரி​யங்கள் முதலிய​வற்றுக்கும் பொருந்​தும்.

விடு​முறையை பொறுத்​தவரை, இந்த ஆண்டில் நவம்பர் மாதத்​தில் பொதுவான சனி, ஞாயிறு விடு​முறை நாட்​களைத் தவிர வேறு அரசு விடு​முறை என்பது இல்லை.

ரம்ஜான், தமிழ்ப்புத்​தாண்டு, தீபாவளி பண்டிகை ஆகியவை திங்கள் கிழமை​களில் வருவ​தால், 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்​கும். மேலும், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளி, சனிக்​கிழமை​களில் வருவ​தால் 3 நாள் தொடர் விடு​முறையாக அமைகிறது.

மேலும் இந்தாண்டு, குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, பக்​ரீத் பண்டிகை, மொகரம், கிருஷ்ண ஜெயந்தி சனி, ஞா​யிறு ​விடு​முறை நாட்களில் வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *