செய்திகள்

2024-25 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு ‘செஞ்சிக் கோட்டை’ பரிந்துரை

சென்னை, ஜன. 30–

2024 – 25 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக உலக பாரம்பரிய மையம் அறிவித்துள்ளது.

1510-ம் ஆண்டில் விஜயநகர மன்னர்களால் செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது. இதையடுத்து, ராஜகிரி, கிருஷ்ணகிரி, சதுரகிரி ஆகிய 3 கோட்டைகளுடன் இன்றும் செஞ்சிக்கோட்டை கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், 2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் அருகேயுள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா ராணுவ நிலப்பரப்பு காட்சிகள் பரிந்துரைக்கப்படுவதாக ஒன்றிய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செஞ்சிக்கோட்டை பரிந்துரை

மராட்டிய ஆட்சியில் ராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க், சிந்துதுர்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளது.

இந்தக் கோட்டைகள் மராட்டிய ஆட்சியின் ராணுவ சக்தியாக இருந்து, 800 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை தற்போதும் வெளிப்படுத்துகின்றன. இந்த 12 புவியியல் மற்றும் நிலப் பகுதிகள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற, இந்திய அரசு சார்பில் யுனெஸ்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *