செய்திகள்

2024 தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் போக வேண்டாம்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்

சென்னை, மார்ச் 22–

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல்களிலிருந்து பொது மக்கள், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கான ‘ரிமோட் ஓட்டிங்’ முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொதுவாக, தேர்தல் காலங்களில் பலர் வாக்களிக்க தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். ஆனால், அந்த நிலை, 2024 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து மாறும் என்று, டெல்லியில் நடைபெற்ற சன்சாத் ரத்னா விருதுகள் 2021- நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுனில் அரோரா கூறியுள்ளார். அது கூறித்து அவர் பேசும்போது,

‘ரிமோட் ஓட்டிங்’ முறை

பொதுமக்கள் வாக்களிக்கும் உரிமையை இனி நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் நிறைவேற்றும் வகையில், ‘ரிமோட் ஓட்டிங்’ முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த புதிய தொழில்நுட்பம் மூலமா,க வாக்காளர்கள் தங்கள் தொகுதிக்குச் செல்லாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்திற்குச் சென்று வாக்களிக்கலாம் என தெரிவித்தார்.

சென்னை ஐஐடியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் மற்றும் இதர ஐஐடிகளும் இணைந்து இந்த ரிமோட் ஓட்டிங் தொழில்நுட்ப முறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த ரிமோட் ஓட்டிங் தொழில்நுட்பத்தில் வாக்களிக்கும் முறை குறித்த சோதனை ஓட்டம் அடுத்த 2,3 மாதங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதே பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *