செய்திகள்

2023 இல் இதயமாற்று அறுவை சிகிச்சை: தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம்

Makkal Kural Official

ஒன்றிய அரசின் அறிக்கையில் தகவல்

டெல்லி, ஆக. 7–

2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவில், அதாவது 3 இல் ஒரு பகுதி இதய மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளது.

இந்திய அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் இந்திய மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் 70 இதய மாற்று அறுவை சிகிச்சை தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 35, மராட்டியம் 33, குஜராத்தில் 29, தெலுங்கானாவில் 15 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.

தமிழ்நாடு முதலிடம்

தமிழ்நாடு, அதிக இதய மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது மிக முக்கியமான சாதனை. இதய மாற்று அறுவை சிகிச்சை, மிகுந்த சிக்கலான மற்றும் நுட்பமான ஒரு அறுவை சிகிச்சையாகும். இதனை வெற்றிகரமாகச் செய்வதில் தமிழ்நாட்டு மருத்துவர்கள் முன்னேறியுள்ளனர். இதனால், தமிழ்நாட்டு மருத்துவமனைகள் இதய மாற்று அறுவை சிகிச்சையில் முன்னிலை வகிக்கின்றன.

மேலும் தமிழ்நாடு அரசும் இதய அறுவை சிகிச்சைக்ககான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. மருத்துவ நுட்பங்களின் மேம்பாடும், மருத்துவர்களின் திறமையும், தமிழ்நாட்டை இதய மாற்று அறுவை சிகிச்சையில் முதலிட மாநிலமாக மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திறனுடன் உள்ளன. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *