வர்த்தகம்

செல்போன் செயலி மூலம் பூட்டலாம்; திறக்கலாம்; கண்காணிக்கும் வசதியுடன் 2021 ஜீப் காம்பஸ் சொகுசு கார் அறிமுகம்

சென்னை, ஜன.11

பியட் கிறிஸ்லர் கார் நிறுவனம் ஜீப் காம்பஸ் சொகுசு கார்களை தயாரித்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இது புதியதாக 2021 ஜீப் காம்பஸ் காரை தயாரித்து வெள்ளோட்டம் விட்டுள்ளது. இந்தியாவில் புனே நகரில் தயாரிக்கப்படும் இந்த கார் நிறுவனம் ‘2021 ஜீப் காம்பஸ்’ என்ற பெயரில் புதிய காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இம்மாத இறுதியில் இதை வாடிக்கையாளர் சோதனையாக ஓட்டிப் பார்க்கலாம்.

இந்த காரை செல்போன் செயலி மூலம் பூட்டலாம், திறக்கலாம். காரின் செயல்பாடு தன்மை அறிக்கை பெறுவதால், இதை நீண்டதூரம் செலுத்த திட்டமிட முடியும். வாகனத்தை ஓட்டும் டிரைவர் தன்மை, திறமை பற்றி அறிக்கை மூலம், டிரைவர் ஓட்டும் ஸ்டைலை தீர்மானிக்கலாம். கார் எங்கு சென்று கொண்டிருக்கிறது என செல்போன் மூலம் கண்காணிக்கலாம். விபத்து, திருட்டு ஏற்பட்டால் செல்போன் செயலி மூலம் கார் என்ஜின் ஓட முடியாதபடி செய்ய முடியும்.

இது அறிமுகமாகும் போது இதன் விலை நிர்ணயிக்கப்படும் என்றார் அவர். இந்த காரில் டிஜிட்டல் ஸ்கிரீன் வசதியுடன் பல்வேறு தகவல், கேளிக்கை வசதிகள் உள்ளது. செல்போன் செயலி மூலம் காரின் வசதிகளை கண்ட்ரோல் செய்யலாம். இதில் எல்லா கோணத்திலும் செயல்படும் கேமிரா உள்ளது என்று இதன் பிரசிடெண்ட் பார்த்தா தத்தா தெரிவித்தார்.

இந்த புதிய 2021 ஜீப் காம்பஸ் உலகத்தரம், கூடுதல் பாதுகாப்பு, அதிக சக்தி மற்றும் செயல்பாடு கொண்டதாக என்ளது. இதில் என்ஜினீயரிங் சிறப்பு தொழில் நுட்பம் உள்ளது. இந்த கார் கவர்ச்சி தோற்றம் கொண்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *