போஸ்டர் செய்தி

2021–ல் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி தான்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை, பிப்.25–

2021 சட்டமன்ற தேர்தலிலும் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னாள் முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை யொட்டி வடசென்னை ஆர்.கே.நகர் பகுதி இளைய முதலி தெருவில் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் முன்னிலையில் மாபெரும் பொதுக்கூட்டம், மற்றும் 18000-பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இ.மதுசூதனன், ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதனைத்தொடந்து ஒ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கேரள செண்டை மேளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க வழி நெடுகிலும் மலர் தூவி உற்சாகமான வரவேற்பு மாவட்ட கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேல், வீரவாள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது.

 

மாநாடு போல் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நன்னாளை முன்னிட்டு, நான் 100–க்கும் மேற்பட்ட பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் தான், நான் கலந்து கொண்ட கூட்டத்திலேயே மிகப்பெரிய கூட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா நமக்கு அன்பான ஆலோசனைகளை, கோரிக்கைகளை, வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அம்மா விடுத்த கோரிக்கையினை ஏற்றுதான் சகோதரர் ராஜேஷ் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற விழாவாக இந்த விழாவை இணைத்து இங்கு பொதுக் கூட்டம் என்று சொல்லி மாநாடே நடத்திக் கொண்டிருக்கிறார்.

அம்மா மறைந்ததற்கு பின்னாலும், அம்மா சொன்ன அறிவுரைகள், ஆலோசனைகள், நடந்துவந்த பாதை, எவ்வாறு இயக்கம் கொள்கை அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதை அம்மா வகுத்து தந்த பாதையில் இன்றைக்கும் நம்முடைய அண்ணா தி.மு.க., அம்மா நடந்து வந்த பாதையில் தடம்புரளாமல் அப்படியே சென்று கொண்டிருக்கிறது.

அண்ணா தி.மு.க. 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு 18 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கத்தை, அவரது மறைவிற்கு பின்னர் எப்படியாவது இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எண்ணினார், அவரின் பல இன்னல்களை தாங்கி தனது வாழ்க்கையை தியாகம் செய்து, அம்மாவால் பாதுகாக்கப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆலம் விழுதுகளாக ஊன்றி ஆல மரமாக எந்த சுனாமி வந்தாலும் அசையாது, புயல் வந்தாலும் அசையாது, பூகம்பம் வந்தாலும் அசையாது, எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக மாற்றினார். தமிழகத்தில் 15 லட்சம் குடிசைகள் இருப்பது என்று கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு படிப்படியாக வீடு கட்டும் திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், பசுமை வீடுகள், தாமாகவே வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் வீடுகள் என இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

2023–க்குள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள்

உறுதியாக 2023 ஆண்டிற்குள் அனைத்து குடிசைப்பகுதியில் வாழுகின்ற ஏழை எளிய மக்களுக்கு தரமான உறுதியான கான்கிரீட் வீடுகள் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உறுதியாக வீடுகள் கட்டித் தரப்படும்.

அம்மாவின் ஆட்சியை இன்று தலைமை ஏற்றுக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் என்ன சாதனைகள் இதுவரை செய்யவில்லை என்று கேட்டுக்கொள்கிறோம்.

மொத்தமாக நீங்கள் ஏழை எளிய மக்களுக்கு கட்டி தரப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து எட்டாயிரம் ஆனால், நாங்கள் 2011–ல் இருந்து இன்றுவரை எங்கள் ஆட்சியில் 6 லட்சம் வீடுகள் இந்த எட்டு ஆண்டுகளில் கட்டி தரப்பட்டுள்ளது இது சாதனை இல்லையா,

பெண்கள் நாட்டின் கண்கள் என்று அம்மா எண்ணிய காரணத்தினால் பெண்கள் முன்னேற்றம் பெறவேண்டு மென்றும், சமூகத்தில் நல்ல மரியாதையுடன் வாழவேண்டும் என்றுபதற்காக, 2 பெண் குழந்தைகள் பிறந்தால், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்தையும், பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரம் ஆகவும்,

தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார். மீண்டும் தமிழகத்தில் 2016–ம் ஆண்டில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி தருவேன் என அம்மா அறிவித்தார், அதேபோன்று அம்மாவின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் அதை உயர்த்தி வழங்கிக் கொண்டிருக்கிறோம். பேறுகால நிதி உதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்தது 2016–ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அம்மா ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இன்று நாங்கள் அதை வழங்கி கொண்டிருக்கிறோம்.

மானிய விலையில் ஸ்கூட்டி

அம்மா அறிவித்தார், வேலைக்கு பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டி வழங்கும் திட்டம், அதையும் தற்போது நாங்கள் நிறைவேற்றி ஸ்கூட்டி மானியவிலையில் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு அண்ணன்மார்கள் எல்லாம் பின்னாடி உட்கார்ந்து கொண்டு, தங்கச்சிமார்கள் எல்லாம் ஜம்முன்னு ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக சமத்துவம், ஜனநாயகம், சோஷலிசம் என்று தந்தை பெரியார் கண்ட கனவை அம்மா நனவாக்கியுள்ளார்.

இன்று விவசாயத் துறையிலே 1 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்து மத்திய அரசின் க்ருஷ் கர்மா விருதினை பெற்று தந்துள்ளது.

இலவச பாடப்புத்தகங்கள், வருடத்திற்கு 4 செட் வண்ண உடை, இலவச பாடப்புத்தகம், 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இலவச லேப்டாப், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள், இவ்வாறு 16 வகையாக உபகரணங்களை வழங்கியதால் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை என அனைத்து மட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கை அதிமாகியுள்ளது.

படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இந்தியாவிலேயே அம்மா உடைய அரசு தான் கல்வித் துறைக்கு சிறப்பாக செயல்படுகிறது என்ற நிலையை உருவாகியிருக்கிறது. இதெல்லாம் அம்மாவின் ஆட்சியின் சாதனைகள், இந்த நல்ல திட்டங்களை அனைத்தும், இன்றைக்கு அப்படியே நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்கும் மேலாக கூடுதலாக தான் செய்து கொண்டிருக்கிறோம்.

அம்மாவின் ஆட்சியில் தான் உயர்கல்வித் துறையில் 66 கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ, வெட்னரி கலேஜ், 2016 லிருந்து 2019 வரைதான். இதுவரை 2 வருடத்தில் 8 சட்டக் கல்லூரியை உருவாக்கிய வரலாறு இந்தியாவிலேயே, எந்த மாநிலத்திலும் இல்லை.

அனைத்து துறைகளிலும், முன்னேற்றம், தொழில் துறையை பாருங்கள், நாம் இப்போது ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு முதலீடு செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் அனைத்தும் தொடங்கி தொழில் துறையில் சாதனை படைத்துள்ளோம். தி.மு.க. ஆட்சிக்காலத்தை விட 6 மடங்கிற்கு மேலாக சாதனை படைத்துள்ளோம். மத்தியில், காங்கிரஸ் – தி.மு.க. உடனான கூட்டணி ஆட்சி 2007 முதல் 2011–ம் ஆண்டு வரை இருந்தபோது தமிழகத்தில் திமுக தான் ஆட்சிக் கட்டிலில் இருந்தது.

ஆனால் தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டுவந்து சேர்க்கவில்லை, நாம் காலம் காலமாக இருந்துவந்த ஜீவாதார உரிமைகளை உயிர்நாடியான காவேரி நதி நீர் பங்கிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

மத்தியில் ஆட்சியில் இருந்த போது தி.மு.க. என்ன செய்தது?

அம்மா தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினையை தீர்க்க 2012–ம் ஆண்டு, பலமுறை டெல்லி சென்று, அன்றைய திமுக கூட்டணி ஆட்சியில் பாரத பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம், காவேரி நதிநீர் நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் (கெசட்) வெளியிடுவதற்கு பலமுறை வேண்டுகோளை விடுத்தார். அதுவும் பயனில்லாமல் போனது.

பிறகு உச்சநீதிமன்றம் சென்று வாதாடி, போராடி சட்டப்போராட்டம் நடத்தி அம்மா 2013–ம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர், ஒரே முதலமைச்சர் அம்மா தான். மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக அதை செய்யவே இல்லை.

அதேபோல் இலங்கை தமிழ்கள் இலங்கையில் அல்லல்பட்டு இருந்தார்கள், இதன் காரணமாக அங்கு சிலோனில் 2009–ல் மிகப்பெரிய போர் நடைபெற்றது. அப்பொழுது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தவர்கள் அப்பொழுது அவர்களுக்கு ஏற்கனவே உளவுத்துறையின் மூலம் அவர்களுக்கு தெரியும், அங்கு போர் நடைபெற இருக்கின்றது என்று அவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தால் போதும், அதுமட்டும் இல்லாமல் இந்திய இராணுவ தளவாடங்கள் இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க அங்கு அனுப்பப்பட்ட போது ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தால் கூட இந்த அளவிற்கு உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது.

அப்பொழுது கருணாநிதி ஒரு நாடகம் ஆடினார், உண்ணாவிரம் இருந்தேன் என்றார், நான் தான் மத்திய அரசிடம் சொல்லி போர் நிறுத்தப்பட்டது என்று சொன்னார். அதை நம்பி இலங்கை தமிழர்கள் பதுங்கு குழியில் பதுங்கி இருந்த 40 ஆயிரம் குழந்தைகள் அப்பொழுது குண்டுமழை பொய்து நாற்பதாயிரம் குழந்தைகள் இறந்தார்கள் அக்குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம் அன்று ஆண்டுகொண்டிருந்த காங்கிரசும், திமுகவும் தான். இதனால் என்ன பயன்? இலங்கையில் 4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அதுமட்டும் இல்லாமல் 5 லட்சம் பேர் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களை காப்பாற்ற முடியாத ஆட்சியாக அப்பொழுது இருந்த திமுக – காங்கிரஸ் ஆட்சி இருந்து வந்தது.

மேலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் இலங்கை தமிழ் மக்களுக்காக நாங்கள் போராடுகின்றோம் என நாடகமாடிக் கொண்டு, அக்கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் ராஜபக்ஷேவிடம் பரிசுப்பொருட்கள் வாங்கி வந்தார்கள்.

துணிச்சல் தலைவி அம்மா

சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவித்ததற்கு ஏதாவது முயற்சி செய்தார்களா, இல்லை. ஆனால் அம்மா சட்டமன்றத்தில் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய தைரியமான ஒரே தலைவி, நமது அம்மா மட்டுமே.

இவ்வாறு அம்மா தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தாலும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்தாலும் சரி நல்லது செய்யும் உன்னத தலைவராக இருந்திருக்கிறார், இது எல்லாம் கடந்த கால வரலாறு.

அதேபோன்று கட்ச தீவு என்பது நமது தமிழ் நிலம் ராமநாதபுர ராஜா சேதுபதிக்கு சொந்தமான நிலம், வருவாய் ஆவணங்களில் உறுதிப்பட இருக்கிறது. பட்டாவும் இருக்கிறது. அந்த நிலத்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தார், தமிழகத்திற்கு சொந்தமான நிலத்தை தாரைவார்த்து கொடுத்ததால் இன்றைக்கு தமிழக மீனவர்கள் அதைச் சுற்றி சென்று மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள், படகுகளை பிடுங்கி விரட்டி அடித்து சித்ரவதை செய்தார்கள்.

அம்மா தான் மத்திய அரசிடமும், இலங்கை அரசிடம் பேசி மீனவர்களின் படகுகளை மீட்டு, படிப்படியாக பிரச்சினையை தீர்த்து வைத்தார். இவ்வாறு அம்மாவின் வழியில் நடைபெறும் ஆட்சி எந்த விதத்திலும் வழுவாமல், அதற்கும் மேலாக, எதையும் குறைவில்லாமல், தற்போது அன்பிற்கினிய எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் பொய் பொய்யா பேசி எப்படியோ நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என கனவு கோட்டை கட்டி கொண்டு சுற்றி வருகிறார். ஒரு முறை தான் ஏமாந்துவிட்டோம், இனி ஏமாற மாட்டோம். நம்ம தாய்மார்கள் சேர்ந்து விரட்டிவிடுவார்கள்.

ஆக இவ்வாறு சீர்த்தூக்கி பார்க்க வேண்டும், யார் நல்லாட்சி செய்தார்கள், யார் உன்னதமான ஆட்சி தமிழகத்திற்கு தந்தார்கள் என்று.

அவ்வளவு செய்தும் ஆர்.கே.நகரில் எங்களுக்கு வெற்றி தரவில்லை. ஒருவர் வெற்றி பெற்றார். யாரு டி.டி.வி.தினகரன், அவர் வெற்றி பெற்றதோடு சரி, இந்த தொகுதி பக்கமே வரவில்லை. இங்குள்ள மக்கள் என்னை பார்க்கும் போது மன்னித்து விடுங்கள் அண்ணா, தெரியாம ஏமாந்துவிட்டோம் என்று வருத்தப்படுகிறார்கள். ஆக நாம் அனைவரும் அம்மாவின் பிறந்தநாளில் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும். இனிவரும் அனைத்து தேர்தலிலும் மாநகராட்சி தேர்தலிலும் சரி, 2021–ல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் சரி, இனி ஆர்.கே.நகர் தொகுதியிலும், தமிழகத்திலும் அண்ணா தி.மு.க வை-தான் வெற்றிப்பெற வைக்க வேண்டும் என்று உறுதி மொழி ஏற்போம்.

அம்மாவின் பிறந்தநாளில் இந்த நலத்திட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பான முறையில் நடைபெற ஒத்துழைத்த, புரட்சித் தலைவரின் காலத்தில் இருந்து, கழகத்திற்கு தொண்டாற்றி வரும் அவைத்தலைவர் மதுசூதனனின் சீடனாக விளங்கும், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷை மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

மதுசூதனன்

அவைத்தலைவர் மதுசூதனன் பேசியதாவது:–

மனிதநேயம் மிக்க தலைவர்களில் இன்றளவும் போற்ற கூடியவர்களில் அம்மாவும் ஒருவர். அவர் உருவாக்கிய திட்டங்களால் இந்திய தலைவர்கள் மட்டும் அல்ல அயல்நாட்டு தலைவர்களும் மறைந்த அம்மாவை போற்றி பாராட்டுகிறார்கள்.

அம்மா நம்மை விட்டு சென்றாலும் அவர் என்றும் நம்முடன் தான் இருக்கிறார். தமது சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கு தான் எனவும் தமிழக மக்கள் தான் எனது சொந்தங்கள் என கூறியவர் மறைந்த முதல்வர் அம்மா.

அண்ணா தி.மு.க.வின் நல்லாட்சி தொடரவும் வரும் 2021-ல் நடைபெறும் பொது தோர்தலிலும் மகத்தான வெற்றி பெற்று அம்மாவின் பாதங்களில் சமர்ப்பித்து மீண்டும் ஆட்சி பீடத்தில் இருப்போம் என இந்த பிறந்த நாள் விழாவில் நாம் சபதமேற்ப்போம் என பேசினார்.

ஆர்.எஸ்.ராஜேஷ்

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசியதாவது:–

அம்மாவின் ஆத்மா வாழும் இந்த ஆர்.கே.நகர் பகுதியில் வாழும் மக்கள் இதயங்களிலும் இல்லங்களிலும் அம்மா திட்டங்கள் இல்லாமல் இல்லை. அவர் வாழும் தெய்வமாக புகழ் பெற்றுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றுமையின் புரட்சி சாதனையாளர் என்றே கூறலாம். ஒரு தலைவன் உருவாக வேண்டுமானால் அவரின் அறிவுரைகளை ஏற்க வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எதனையும் சாதிக்க முடியும். தமிழக மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் மட்டுமே செயல்படுத்த முடியும். நூறாண்டுகள் ஆனாலும் அண்ணா தி.மு.க. என்ற பேரியக்கத்தையும் ஆட்சியையும் தொட்டு பார்க்கவோ, அசைக்கவோ எந்த கொம்பனாலும் முடியாது.

பெரம்பூர் தொகுதியில் அனைத்து மதத்தினருக்கான மயான பூமிக்கான இடத்தை பெற்று தந்தது அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் என ஆர். எஸ்.ராஜேஷ் பேசினார்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ஆர்.எஸ்.ஜெனார்தனம், ஏ.கணேசன், மா.ஜெயபிரகாசம், டிஒய்கே.செந்தில், நாம்கோ கூட்டுறவு சங்க சேர்மன் வியாசை எம். இளங்கோவன், ஜி.கிருஷ்ணவேணி, ஏ.டேவிட்ஞானசேகரன், இ.எஸ்.சதீஷ்பாபு, லயன் மா.வெங்கட்ராம், மு. வெற்றிவேந்தன், எஸ்.பி.எஸ்.ராஜா, பி.ஜெகன், லயன் ஜி.குமார், ஆட்டோ தேவராஜ், அண்ணா நகர் எம்.வேலு, இ.வேலுமேஸ்திரி, ஏ.வினாயகமூர்த்தி, ஆர்.நித்தியானந்தம், நாகூர்மீரான், பி.பாபுராஜ், ஜெ.எம்.நரசிம்மன், எம்.விஜயகுமார், குமுதா பெருமாள், புருஷோத்தமன், எம்.என்.சீனிவாசபாலாஜி, இராமமூர்த்தி, வேல்முருகன், எல்.எஸ். மகேஷ்குமார்,

எம்.கண்ணா, எம்.மாலா, எஸ்.மோகன், ஜெசிபி.சுரேஷ், டி.ஷகிலா, இரா.முரளிமுருகன், அண்ணா தொழிற்சங்கம் மின்சார பிரிவு ஜி.மோகன், தனபால் நகர் ஆர்.சிவகுமார், நெல்லை கே.குமார், சுஜாதாமதனகோபால், கே.எஸ். அஸ்லாம், ஏ.சசிரேகா, எஸ்.ஆர்.அன்பு, எம். ஹரிகிருஷ்ணன், ஏ.இஎம்எஸ். நிர்மல்குமார், ஏ.இளவரசன், டி.பிரபா, பி.ஜே.பாஸ்கர், புல்லட் டி.பிராங்கிளின், எஸ்.பி.பி.பிரேம்குமார், ஒ.ஏ.ரவிராஜன், வி.கோபிநாத், ஜி.ராஜேந்திரன், கருப்பு இராஜேந்திரன், காஞ்சி.ராஜரத்தினம், வி.பொன்முடி, மகேந்திரமணி, எம்.பாஞ்ச்பீர், டி.கனகராஜ், ஏ.ஆனந்த், மற்றும் பெரம்பூர், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த வட்ட கழகத்தினர், பகுதி கழகத்தினர், மாவட்ட பிற அணி நிர்வாகிகள், மகளிரணியினர், வழக்கறிஞர் அணி, மீனவரணியினர், பாக பொருப்பாளர்கள், உள்பட பலர் இருந்தனர்.

* * *

18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

1 – ஷேர் ஆட்டோ, 14–ஆக்டிவா 5-ஜி ஸ்கூட்டர், 72 இரு சக்கர மிதிவண்டி, 17 ஊனமுற்றோருக்கான மூன்று சக்கர கை வண்டி, 14 தள்ளு வண்டி, 14 டிபன் வண்டி, 14 மீன்பாடி வண்டி, 72 வெட்கிரைண்டர், 72 ஏர் கூலர், 72 மிக்சி, 72 தையல் மிஷின், 300 இட்லி பானை, 14 இஸ்திரி பெட்டி, 300 அன்னக்கூடை, 10 ஆயிரம் மில்க் பாய்லர் குக்கர், 2 ஆயிரம் எவர் சில்வர் பிளேட், 2 ஆயிரம் புடவைகள், 200 வேட்டிகள், 500 ஆட்டோ ஓட்டுநருக்கான யூனிபார்ம், 100 பேட், ஸ்டெம்ப், பால், அடங்கிய கிரிக்கெட் கிட், 100 கால்பந்தாட்ட பால், பூ கடை டேபிள் 12 உள்ளிட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழாவில் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *