செய்திகள்

2021–ம் ஆண்டில் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு : மதுரை லேடி டோக் கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள் எடுத்தனர்

மதுரை, பிப். 17–

மதுரை லேடி டோக் கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள் 2021–ம் ஆண்டு கடந்த 15–ம் தேதியன்று பறவைகளின் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 56 ஆண்டுகளாக ஒரு வழக்கமான நிகழ்வு நடந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பொங்கல் நாட்களில் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவிகளும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆசிய நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் தற்போது வளாக பறவைகள் கணக்கெடுப்பிலும் பங்கேற்றனர். மாணவிகள் வளாகத்தில் வழக்கமாக வசிக்கும் பறவைகள் தவிர ஒரு சில புலம் பெயர்ந்த பறவைகள் குறிப்பாக ஆசிய வீதிவால் குருவி மற்றும் இந்திய வேதிவால் குருவி ஆகிய வளாகத்தில் காணப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் பறவையினங்களின் எண்ணிக்கை நிலையானதாக தெரிகிறது. சுமார் 30 வகையான பறவைகள் இங்கு இருப்பது பறவைகளின் சுற்றுச்சூழல் நட்புடன் இருக்கும் மரங்கள் மற்றும் புதர்கள் இருப்பதால் ஆகும். இதில் பங்கேற்றவர்களில் சில மாணவிகளும் ஆசிரியர்களும் தங்களது முதல் அனுபவத்தில் வளாகத்தில் உள்ள பறவைகளின் பன்முகத்தன்மையால் மிகவும் ஈர்க்கப்பட்டனர்.

வழக்கமான புலம்பெயர்ந்த ஆசிய வீதிவால் குருவி பறவைகளை நட்சத்திர ஈர்ப்புகளில் ஒன்றாக அமைந்தது. வளாகத்தில் காணப்பட்ட புள்ளி ஆந்தைகள், செந்தார்ப் பைங்கிளிகள் மற்றும் பனை உழவாரன் ஆகிய பறவைகள் இனப்பெருக்கம் செய்து வருகிறது.

குறிப்பாக செம்மார்புக் குக்குறுவான், அதன் இருக்கும் பகுதியை அதன் தனித்துவமான அழைப்பின் மூலம் உணர வைக்கிறது. ஆசிய நீல நிறப்பறவைகள் கணக்கெடுப்பின் போது 74 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் இந்த ஆண்டு சாமனத்தத்தின் ஈர நிலத்தில் சின்ன கானாங்கோழி மற்றும் மீன்பிடி கழுகை பார்த்ததின் மூலம் இந்த நிகழ்வு ஒரு அற்புதமான திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக ஆசிய ஈரநிலப்பறவைகள் கணக்கெடுப்பின்போது நீளவால் இலைக் கோழியின் இனப்பெருக்கம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது வரவேற்கத்தக்க மாற்றம்மாகும்.

பல்வேறு வாழ்விடங்களில் பறவைகளை கவனிப்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களை அதன் வழங்கும் பன்முகத்தன்மை செல்வத்தையும் அறிந்தனர். ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி வரை இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்தது லேடி டோக் பெருமாட்டி கல்லூரி விலங்கியல் துறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *