* கோயபல்ஸ் பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின்
* உதயநிதியின் பக்குவமற்ற பேச்சு அநாகரித்தின் உச்சகட்டம்
2021 சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி தி.மு.க.விற்கு சரியான சவுக்கடி கொடுத்து விரட்டியடியுங்கள்
மதுரை கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு
மதுரை, ஜன. 15–
2021 சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி தி.மு.க.விற்கு சரியான சவுக்கடி கொடுத்து விரட்டியடியக்க வேண்டும் என்று மதுரை டி.கல்லுப்பட்டியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அரசியல் அநாகரிக நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற தி.மு.க.வை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் டி. கல்லுப்பட்டியில் மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராமசாமி தலைமை தாங்கினார் பி.ஐயப்பன் பாவடியான், முனியம்மாள், நெடுமாறன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்பதி, ராமகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், மாணிக்கம், சம்பத் ஆகியோர் உரையாற்றினர்
கூட்டத்திற்கு கழக ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தத் தைத் திருநாளில் கூட தி.மு.க. வை கண்டித்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் திரண்டு இருப்பதைப் பார்த்தால் அநீதி எங்கே நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் மாவட்டமாக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் என்பதற்கு சாட்சியாக இக்கூட்டம் திகழ்கிறது. நாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்கூட ஜனநாயக கடமையை கடைப்பிடித்து வருகிறோம்.
உதயநிதியின் பக்குவமற்ற பேச்சு அநாகரித்தின் உச்சகட்டமாக உள்ளது. தாயை தெய்வமாக வணங்கும் இனம் தமிழினம் அந்தத் தாயை முகம் சுளிக்கும் வகையில் பேசியதைகேட்டு தமிழினமே வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உதயநிதிக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வருவாய் துறை அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரன் கருணாநிதியை கருவின் குற்றம் என்று கூறினார். எனக்கு அது தற்போது நினைவுக்கு வருவது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மக்களிடத்தில் வாக்குகள் பெற வேண்டும் என்றால் மக்களை சந்திக்க வேண்டும். ஆனால் கொரோனா காலத்தில் ஸ்டாலின் எங்கே போனார். நான்கு அறைக்குள் உட்கார்ந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கட்சிக்காரர்களிடம் மட்டும் பேசினார் ஸ்டாலின். ஆனால் தன் உயிரை பணயம் வைத்து அம்மாவின் வழியில் அனைத்து மாவட்டங்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து மக்களையும் சந்தித்தவர் நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தற்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததுடன் தற்போது வெளியே வருகிறார் ஸ்டாலின். மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 16–ந் தேதி முதலமைச்சர் கொரோனா தடுப்பூசியை மதுரையில் தொடங்கி வைக்கிறார். இதே போன்று புரட்சி தலைவர் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்கி வைத்தார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தி.மு.க. ஆட்சிக்கு வர துடிக்கிறது. மக்களுக்காக தி.மு.க. என்ன தியாகம் செய்தது என்பதை நாட்டு மக்களுக்கு திமுக கூற முடியுமா? இன்றைக்கு கோயபல்ஸ் பொய் பிரச்சாரம் செய்துவரும் ஸ்டாலின் மற்றும் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய உதயநிதி ஆகியோருக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தீயசக்தி தி.மு.க.விற்கு சரியான சவுக்கடி கொடுத்து விரட்டியடிக்க வேண்டும். மீண்டும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆகியோரின் புனித ஆட்சி மலர முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்கு நீங்கள் வாக்களித்து அமோக வெற்றி பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே. மாணிக்கம், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, பாண்டியம்மாள், கருப்பையா, மற்றும் வெற்றிவேல், அன்னபூர்ணா தங்கராஜ், ராமகிருஷ்ணன், ஏ.கே.பி. சுப்ரமணியன், வேலுச்சாமி, பஞ்சவர்ணம், பஞ்சம்மாள், பால்பாண்டி, தமிழழகன், தமிழ்செல்வன், சிங்கராஜா பாண்டியன், லட்சுமி, காசிமாயன் ,போத்திராஜா, ஆர்யா மற்றும் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், மகாலிங்கம், ரவிச்சந்திரன், பிச்சைராஜா, செல்லம்பட்டி ராஜா, நகர் கழக செயலாளர்கள் பூமாராஜா,விஜயன், பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராஜ், சுதாகரன், சுமதி, பேரூர் கழக செயலாளர் அழகுராஜா, குமார் வாசிமலை, கொரியர் கணேசன் ஒன்றிய பெருந்தலைவர்கள் லதா ஜெகன், சண்முகப்பிரியா, மீனாட்சி, கவிதா, மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்