செய்திகள்

2020 ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் 2021ல் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு: ஹஜ் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி, செப்.20–

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. ஹஜ் குழு தலைவர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். அரசு அதிகாரிகள் நஜ்முதீன், சந்திர மோகன், உறுப்பினர்கள் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ, தமீமுன் அன்சாரி எம்எல்ஏ, முஹம்மது அஸ்ரப், ஜவஹர் அலி, மௌலானா சுஹைப் அஹ்மது, அமதுல் ஆதிபா, முஹம்மது காசிப், லியாகத் அலி கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 15 கோடியில் ஹஜ் இல்லம் கட்ட தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை தமிழ் நாடு வக்ஃப் வாரியத்துடன் கலந்தாலோசித்து கட்டுமான பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2020 – ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள பதிவு செய்து தேர்வானவர்கள் கொரோனா தொற்று காரணமாக பயணம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால். வருகின்ற 2021 – ம் ஆண்டு ஏற்கனவே தேர்வானவர்கள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

2021 – ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மக்கா, மதீனாவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். அதற்காக சிறப்பு குழுவினரை அமைத்து முன்னதாக சென்று முன்னேற்பாடுகள் செய்தல் ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *