செய்திகள்

இந்தியாவில் இதுவரை 20.33 கோடி கொரோனா பரிசோதனைகள்

புதுடெல்லி, பிப்.10–

இந்தியாவில் இதுவரை 20 கோடியே 33 லட்சத்து 24 ஆயிரத்து 655 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 58 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 13,087 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 608 ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 511 பேர் சிகிச்சை பெற்று வருவகின்றனர்.

இந்தியா முழுவதும் 66 லட்சத்து 11 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 20 கோடியே 33 லட்சத்து 24 ஆயிரத்து 655 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று 7 லட்சத்து 36 ஆயிரத்து 903 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *