செய்திகள்

20 வளர்ப்பு பூனைகளால் கடித்துக்குதறி கொல்லப்பட்ட உரியமையாளர் பெண்

மாஸ்கோ, ஜூன் 21–

பெண் ஒருவர் தான் வளர்த்த பூனைகளால் கடித்து குதறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் வீட்டில் உயிரிழந்த பெண்ணின் அழுகிய உடலை போலீசார் மீட்டனர். இறந்த பெண்ணுடன் உடன் பணிபுரிந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கச் சென்றபோதுதான், அவர் வளர்த்த சுமார் 20 பூனைகளே அவரை கடித்து குதறியது தெரியவந்தது.

வளர்த்தவரையே கடித்த பூனைகள்

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக வீட்டில் அப்பெண்ணின் சடலம் பூனைகள் சூழ இருந்திருக்கலாம் என போலீசார் கணித்துள்ளனர். உரிமையாளரை கடித்துக் கொன்ற பூனைகள் அவர் இறந்த பிறகும் விடாமல் அவரது உடல்பாகங்களை தின்றதும் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களாக அந்த பூனைகளுக்கு உரிமையாளர் எந்த உணவும் கொடுக்காமல் வெளியே சென்றிருக்கிறார். பசியின் வெறியோடு இருந்த அந்த பூனைகள், அப்பெண்ணையே உணவாக மாற்றியிருக்கிறது.

அதனால் செல்லப்பிராணிகளை வளர்ப்போர், அதற்கான கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த அறிவுரைகளை பெற்று செயல்பட வேண்டும் என போலீசார் தரப்பிலும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பிலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.