செய்திகள்

20 மொழிகளில் மணிமேகலை காப்பியம் மொழிபெயர்பு

செம்மொழி நிறுவனம் முடிவு

சென்னை, ஏப். 6–

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தை, 20 உலக மொழிகளில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மொழிபெயர்க்க முடிவு செய்துள்ளது.

தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலகம் அறியச் செய்ய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருக்குறளைத் தொடர்ந்து பௌத்த இலக்கியமான மணிமேகலையை, உலக மொழிகளில் மொழிபெயர்க்க பணிகள் மேற்கொண்டு வருகிறது.

20 மொழிகளில் மொழிபெயர்ப்பு

சிங்களம், மலாய், தாய், சீனா, கொரியன், மங்கோலியன், ஜப்பான், பர்மீஸ் உள்ளிட்ட 20 உலக மொழிகளில் மணிமேகலை இலக்கியத்தை மொழிபெயர்க்கிறது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். பௌத்த தத்துவங்களை பேசும் சங்க கால இலக்கியமான மணிமேகலையின் பெருமையை, பௌத்த மதம் பரவலாக உள்ள இலங்கை, சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பரப்ப முயற்சி எடுத்துள்ளது.

முன்னதாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களை மொழிபெயர்க்கும் பணிகளை நிறைவு செய்தது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். சங்க இலக்கியங்கள் அனைத்தையும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.