போஸ்டர் செய்தி

20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி கேரளாவில் கைது

கோவை, செப். 11–

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி இன்று கேரளாவில் கைது செய்யப்பட்டான்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து கோவை பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி குண்டு வெடிப்பில் தொடர்புடைய 168 பேரை கைது செய்தனர். இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. இதைத் தொடர்ந்து 153 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புரைய மேலும் சிலரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த நூகு ரசீது (வயது 41) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த நூகு ரசீது கத்தார் நாட்டுக்கு தப்பிவிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் சமீபத்தில் நூகு ரசீது வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டுக்கு சென்றதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கேரளா மாநிலம் கோழிக்கோட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு நூகு வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அங்கு நூகு ரசீது தங்கியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நூகு ரசீதுவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நூகு ரசீது அங்கிருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

நூகு ரசீது மீது குண்டு வைத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், குண்டு வைப்பு சம்பவத்தில் திட்ட திட்டயதிற்கு உதவியாக இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *