செய்திகள்

தாடி வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர்

லக்னோ:

தாடி வைத்ததற்காக ஒரு இஸ்லாமிய காவல்துறை துணை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சார்அலி. ரமலா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நீண்ட தாடி வளர்த்துள்ளார். இந்நிலையில், இவரை திடீரென பாக்பத் மாவட்டத்தின் காவல்துறை தலைமை அதிகாரி அபிஷேக் சிங் சஸ்பெண்ட் செய்துவிட்டார். இதற்கு காரணம், உரிய அனுமதியின்றி அவர், தாடி வைத்திருந்தாராம்.

இது குறித்து அபிஷேக் சிங் கூறுகையில், “கடந்த 3 வருஷமாக இந்த்சார்அலி போலீசாக இங்கு வேலை பார்த்து வருகிறார். அவர் தாடி வைத்திருப்பது குறித்து பல முறை அறிவுறுத்தியும் அவர் விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளார். அவருக்கு இது குறித்து ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆயினும் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து இந்தசார் அலி கூறுகையில், “1994 ல் நான் கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தேன். அப்பவே எனக்கு லேசான தாடி இருந்தது. அந்த தாடி தற்போது நீளமாகிவிட்டது. அவ்வளவுதான். சென்ற வருடம் நான் லீவு கேட்டபோது, சூப்பிரண்ட் பிரதாப் கோபேந்திர யாதவ் என்னிட்ட என்னுடைய தாடி பற்றி கேட்டார்.

நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்தது இல்லை. இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை பெர்மிஷன் கேட்டு லெட்டர் அனுப்பியிருக்கேன். ஆனாலும் அதில் ஒன்றிற்கு கூட இதுவரை பதில் இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *