செய்திகள்

சென்னையில் ரூ.200 வழிப்பறி : டெல்லி வாலிபர்கள் 2 பேர் கைது

Spread the love

சென்னைஅக்.12 –

சாலையில் நடந்து சென்றவரிடம் ரூ.200 வழிப்பறி செய்த டெல்லி வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது ரபீக் (வயது 26) பீட்டர்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த 2 பேர் அவரிடமிருந்த ரூ.200 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்கள். உடனே ரபீக் கத்தினார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடிய 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து தஸ்தகீர் (வயது 36), முகமது நமீம் (வயது 26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். டெல்லியைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் சென்னை வந்து கட்டிட வேலை பார்த்துக் கொண்டே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *