செய்திகள்

2 வது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.160 ஏற்றம்

சென்னை, ஜூலை 2–

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.35,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு மூன்று மாத உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், தங்கம் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை சரியத் தொடங்கியிருந்தாலும், நேற்றும் இன்றும் மீண்டும் சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

ரூ.160 கூடுதல்

நேற்றைய தினம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து சவரன் ரூ.35,560 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றைய தங்கத்தின் நிலவரம், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.35,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.4,465 க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.73.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *