சென்னை, நவ. 02
தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு கன மழை
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் வங்க கடலில் தோன்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, நவம்பர் இரண்டாம் வாரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.