செய்திகள்

2 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலி: காப்பாற்ற முடியாத தந்தை தற்கொலை

திருப்பத்தூர், செப். 11–

குளத்தில் விளையாடிய தனது 2 குழந்தைகள் நீரில் முழ்கி இறந்ததால், வேதனையில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடம்பூர் கைலாசகிரி பகுதியில், வசித்து வருபவர் லோகேஸ்வரன். அவரது மனைவி மீனாட்சி மலைப்பகுதியில், உள்ள முருகன் கோவிலுக்கு நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு, தனது இரண்டு குழந்தைகளை அழைத்துகொண்டு மலைப்பகுதிக்கு சென்றார்.

அங்குள்ள பாறையின் மீது அமர்ந்து லோகேஸ்வரன் ஓய்வு எடுத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவன் ஜஸ்வந்த் மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கும் சகோதரி ஹரி பிரீத்தா ஆகியோர், அங்கு உள்ள குளத்தில் மீன் பிடித்துகொண்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென ஹரி பிரீத்தா நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்ற அவரது அண்ணன் ஜஸ்வந்த் முயற்சித்துள்ளார்.

தந்தையும் தற்கொலை

இதை அறிந்த அவரது தந்தை லோகேஸ்வரன் குளத்தில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. உடனடியாக உமராபாத் காவல் துறையினருக்கும் மற்றும் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஜஸ்வந்த் மற்றும் ஹரி ப்ரீத்தா இருவரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தனது தந்தையுடன் செல்பி எடுத்து கொண்டும் புகைப்படங்கள் எடுத்து கொண்டும் மகிழ்ச்சியாய் விளையாடிய 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், சோகத்தில் இருந்த லோகேஸ்வரன் இன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *