செய்திகள்

2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம்

Makkal Kural Official

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஐதராபாத், நவ. 14–

ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என சந்திரபாபு நாயுடு சட்டத்தை மாற்றியுள்ளார்.

ஆந்திராவில் 1992 ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக சில சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டமும் இயற்றப்பட்டிருந்தது.

சட்டம் மாற்றம்

தற்போது 30 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் ஆந்திராவில் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு இந்த சட்டத்தை நீக்க போவதாக கூறியிருந்தார். இந்தியாவில் வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் தென் மாநிலங்களில் பிறப்பு விகிதாச்சாரம் மிகவும் குறைந்து வருவதாக பேசியிருந்த அவர், இனி ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்ட மசோதா, ஆந்திர சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மாற்றத்திற்கு ஆந்திர மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *