செய்திகள்

1971 இல் கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கண்டெடுப்பு

ஐதராபாத், பிப். 23–

இந்திய கடற்படை அண்மையில் கொள்முதல் செய்திருந்த ஆழ்கடல் மீட்பு வாகனத்தின் மூலம், 1971ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1971ஆம் ஆண்டு, இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, 1971 டிசம்பர் 4 ந்தேதி பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் பிஎன்எஸ் காஸி கடலில் மூழ்கியது. இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வந்த இந்தக் கப்பலை, இந்தியாவின் ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பல் எதிர்கொண்டு தாக்கியது. இதனால், அந்தக் கப்பல் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

மூழ்கிய கப்பலின் பாகங்கள்

ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இதுகுறித்து கூறும்போது, கப்பலில் இருந்த வெடிபொருள்கள் திடீரென வெடித்ததனால் நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியதாகவே இப்போதும் கூறி வருகிறது. அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல், கடலில் மூழ்கும்போது, அதில் 11 அதிகாரிகள் உள்பட 93 பேர் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது விசாகப்பட்டினத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில், 1971 ஆம் ஆண்டு மூழ்கிய, இந்த கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *