செய்திகள்

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ. 101.50 உயர்வு

சென்னை, நவ. 01–

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.101.50 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.101.50 வரை உயர்த்தியுள்ளது. இதன்மூலம் ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை, ரூ.1,999.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

2 மாதத்தில் ரூ. 300 உயர்வு

வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 1-ந்தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களில் ரூ.300-க்கு மேல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், உணவகங்களின் விலை உயர்வு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *