செய்திகள்

18 வயது டி.குகேஷ் புதிய உலக செஸ் சாம்பியன்

Makkal Kural Official

சிங்கப்பூர், டிச.12: 18 வயது இளம் இந்திய சதுரங்க வீரர் டி.குகேஷ், உலக செஸ் சாம்பியன் வென்று வரலாற்றில் தனது பெயரைப் பதித்தார். 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 14வது மற்றும் இறுதி ஆட்டத்தின் போது, பரபரப்பான இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார்.

6.5-6.5 என்ற புள்ளிகள் சமநிலையில் இருந்த நிலையில், இந்த ஆட்டம் சிங்கப்பூரின் கிராண்ட் செஸ் அரங்கில் குகேஷின் குறிப்பிடத்தக்க வெற்றியானது, சதுரங்கத்தின் ஜாம்பவான்களில் ஒருவர் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. இது சதுரங்க உலகில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *