செய்திகள்

இந்தியாவில் 18.34 கோடி கொரோனா பரிசோதனைகள்

புதுடெல்லி, ஜன.13

இந்தியாவில் இதுவரை 18 கோடியே 34 லட்சத்து 89 ஆயிரத்து 114 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே4 லட்சத்து 95 ஆயிரத்து 147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 17,817 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 29 ஆயிரத்து 111 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 18 கோடியே 34 லட்சத்து 89 ஆயிரத்து 114 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 8 லட்சத்து 36 ஆயிரத்து 227 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *