செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி: பிரதமருக்கு ஐஎம்ஏ பரிந்துரை

புதுடெல்லி, ஏப். 7–

நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 3 நாள்களாக இந்தியவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது 1 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில், இந்திய மருத்துவக் கழகம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதமருக்கு ஐஎம்ஏ எழுதியுள்ள கடிதத்தில்,

‘கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. முன்பைவிட இப்போது வேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்த நேரத்தில் நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கடந்த முறை நம்மிடம் தடுப்பூசி இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது தடுப்பூசி கிடைத்துள்ளது. ஏற்கெனவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறோம். அடுத்த கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாகவும், அவா்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளில் செலுத்தப்படுவதுபோல, சிறிய மருத்துவமனை களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *