செய்திகள்

18-ந்தேதி வாக்குப் பதிவு: 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ‘இணைய ஒளிபரப்பு’ வசதி

சென்னை, ஏப்.16

தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

பாராளுமன்ற பொதுத் தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. வரும் 18-ம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

நாடாளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும் (ஆண்கள் 781, பெண்கள் 63, திருநங்கை 1), சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் (ஆண்கள் 242, பெண்கள் 27) போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 67 ஆயிரம் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 30 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் தேர்தல் துறை இணையதள ஒளிபரப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர்கள் நேரடியாக கண்காணிப்பார்கள். மேலும் 8,293 பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் இணையதள ஒளிபரப்பு மூலம் நேரடியாக கண்காணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள்ளாக செல்லிடப்பேசியைக் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்குள் செல்பி போன்ற புகைப்படங்கள் எதையும் வாக்காளர்கள் எடுக்கக் கூடாது.

கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளனர்.

அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பியூஸ் கோயல், ஸ்மிரிதி ரானி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, நடிகர் சரத்குமார் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *