செய்திகள்

18 அடி உயரத்தில் ‘கேக்’: வாளால் வெட்டி மகிழ்ந்த ப்ரயங்கா–நிக் தம்பதி

கோவை, டிச. 6–

பாலிவுட் நட்சத்திரங்கள் ரண்வீர்–தீபிகா திருமணத்தை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது நடிகை ப்ரயங்கா சோப்ராவின் திருமணம்.

இந்தி பட உலகின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக்கின் ஜோன்சை கரம்பிடித்தார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாளிகையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களது திருமண வரவேற்பு விழாவில், பிரதமர் மோடி துவங்கி பிரபல தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், முன்னணி திரை நட்சத்திரங்கள் என பலரும் பங்கேற்று, நட்சத்திர தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இந்நிலையில், திருமண நிகழ்வின் போது, 18 அடி உயரத்தில் அரண்மனை வடிவில் செய்யப்பட்ட கேக்கினை, ப்ரயங்கா சோப்ரா தனது கணவர் நிக்கின் ஜோன்சுடன் இணைந்து வாளால் வெட்டி மகிழ்ந்தார். குவைத் மற்றும் துபாயிலிருந்து வந்த செப்கள் 6 பிரிவுகளாக இந்த கேக்கை வடிவமைத்திருந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *