செய்திகள்

புதுவையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 510 ஆக உயர்வு

புதுவை, ஜூலை. 7 –

புதுவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்தது. புதிதாக புதுவையில் 31 பேரும் காரைக்காலில் ஒருவரும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 1041 பேர் புதுவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 517 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கதிர்காமம் அரசு இந்திரா காந்தி மருத்துவமனையில் 323 பேரும் ஜிப்மரில் 123 பேரும் கோவிட் மையத்தில் 31 பேரும் காரைக்காலில் 8 பேரும் மாகேயில் 9 பேரும் ஏனாமில் 14 விழுப்புரத்தில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *