போஸ்டர் செய்தி

17–ந் தேதி அண்ணா தி.மு.க. மாவட்ட செய­லா­ளர்கள் கூட்­டம்

சென்னை, மார்.15

சென்­னையில் அண்ணா தி.மு.க. மாவட்ட செய­லா­ளர்கள் மற்றும் அமைச்­சர்கள் ஆலோசனை கூட்டம் 17 ந் தேதி நடை­பெ­று­கி­ற­து.

அண்ணா தி.மு.க. தலைமை கழ­கத்தில் 17 ந் தேதி ஞாயி­று அன்­று காலை 10.15 மணிக்கு இந்த கூட்டம் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

அண்ணா தி.மு.க. மெகா கூட்­டணி வெற்றி கூட்­டணி அமைத்து பார்­லிமெண்ட் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்­ட­மன்ற தேர்­தலை சந்­திக்­கி­றது. அண்ணா தி.மு.க. 20 பார்­லிமெண்ட் தொகு­தி­க­ளிலும், 18 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளிலும் வேட்­பா­ளர்­களை நிறுத்­து­கி­ற­து.

20 பார்­லிமெண்ட் தொகு­தி­களில் கூட்­டணி கட்­சிகள் போட்­டி­யி­டு­கின்­ற­ன.இன்­னும் ஓரிரு தினங்­களில் யார் யாருக்கு எந்­தெந்த தொகுதி என்று அறி­விக்­கப்­ப­டும்.

இந்த நிலையில் தேர்தல் பணிகள், அனைத்து தொகு­தி­க­ளிலும் மகத்­தான வெற்றி காண தேர்தல் வியூகம், பிரச்­சார அணு­கு­முறை உட்­பட பல்­வேறு விஷ­யங்கள் குறித்து ஆலோ­சனை நடத்த 17 ந் தேதி அன்று மாவட்ட செய­லா­ளர்கள், அமைச்­சர்கள் கூட்­டத்தை கழக ஒருங்­கி­ணைப்­பா­ளரும், துணை முத­ல­மைச்­ச­ரு­மான ஓ.பன்­னீர்­செல்வம், கழக இணை ஒருங்­கி­ணை­ப்­பா­ளரும் முத­ல­மைச்­ச­ரு­மான எடப்­பாடி பழ­னி­சாமி ஆகியோர் கூட்­டி­யி­ருக்­கி­றார்­கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *