செய்திகள்

16 மாவட்டங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 4–

16 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டும் என்றும், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வருகிறது. வேலூர், திருத்தணி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.

16 மாவட்டங்களில் 100 டிகிரி

இந்நிலையில் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து வீசுவதால், தமிழகத்தில் இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, திருச்சி, மதுரை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியல் வரை உயர்ந்து காணப்படும். இதன்காரணமாக வெயில் 100 டிகிரியை விட கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும். அதேபோல் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 7 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *