செய்திகள்

இந்தியாவில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, மார்ச் 1–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. நேற்று அது சற்று குறைந்து காணப்பட்டது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 241 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,288 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு 1 லட்சத்து 68 ஆயிரத்து 627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1 கோடியே 43 லட்சத்து 1 ஆயிரத்து 266 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 21 கோடியே 68 லட்சத்து 58 ஆயிரத்து 774 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 6 லட்சத்து 27 ஆயிரத்து 668 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *