செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சுந்தர் சியுடன் வடிவேலு:

Makkal Kural Official

முகத்தில் முதிர்ச்சி, ஆனாலும் “சி சென்டருக்கு” முகம் மலர்ச்சி!

சென்னை, ஏப் 27–

15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுந்தர் சி.யோடு இணைந்திருக்கும் வடிவேலு.

35 நாளில் முழுப் படத்தையும் முடித்திருக்கும் சுந்தர் சியின் அசுர வேகம்.

சுந்தர் சி, வடிவேலு, கேதரின் தெரசா, வாணி போஜன், சந்தான பாரதி, விச்சு, பக்ஸ், முனிஷ் காந்த், “மைம்” கோபி, அருள்தாஸ், ஒரே ஒரு காட்சிக்காக விமல்… இப்படி நட்சத்திர குவியல்.

கதை – வசனம் வெங்கட், ஒளிப்பதிவு : எசக்கி கிருஷ்ணசாமி, இசை : சத்யா, ஸ்டண்ட் : மாஸ்டர் ராஜசேகர், எடிட்டர் : பிரவீன் ஆண்டனி, தயாரிப்பு : ஏசி சண்முகம் – அருண்குமார், குஷ்பு சுந்தர்.

பள்ளி மாணவி கடத்தல், போலீசில் புகார், விசாரணை அதிகாரி என்ற போர்வையில் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக நுழையும் சுந்தர் சி, கடத்தல் பின்புலத்தில் அரசியல்+ ரவுடிகள் ராஜ்ஜியம் நடத்தும் ஹரிஷ் பேரடி, மைம் கோபி, அருள் தாஸ், இவர்களை ஒழித்து உண்மையை கண்டறிந்து, அநியாயமாக பதிக்கி வைத்த பணத்தை தன் தர்ம யுத்தத்தில் துணை நின்ற ஏழைத் தோழர்களுக்கு கொடுக்கும் நாயகனின் கூட்டணி: கேங்கர்ஸ்.

கேங்ஸ்டர்ஸ்- ஆயுதங்களைத் தூக்கிய கிரிமினல் கும்பல் என்பதன் மாற்றாக சட்டென்று வாய்க்கு வந்த பெயரையே டைட்டில் ஆக்கி இருக்கிறார் சுந்தர் சி( டைட்டிலுக்கு உபயதாரர் வடிவேலு).

எஸ். வி. சேகரின் நாடகம்: ‘காட்டுல மழை’. அதில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு கதாபாத்திரம் ‘காட்டுல மழை காட்டுல மழை…’ என்று சொல்லிக் கொண்டே போகும். ரசிகர்கள் விழிப்பார்கள். ஏதாவது ஒரு கட்டத்தில் டைட்டிலை சொல்ல வேண்டாமா… அது தான் இப்படி… என்று ஜோக் கடித்து சிரிக்க வைக்கும் எஸ்வி சேகர் ஸ்டைலில்… வடிவேலுவை விட்டு, கேங்கர்ஸ் தலைப்புக்கு விளக்கம் தருகிறார் சுந்தர் சி.

‘‘இதுவரைக்கும் நான் யாரையும் அடிச்சதில்லை…’’ என்று அடி அடி அடி என்ற வார்த்தையை மட்டுமே வைத்து, 60 நொடிகளுக்கு வைகைப்புயல் வசனம் பேசும் கட்டம்… அரங்கு அதிரும்.( என்னதான் பாடி லாங்குவேஜ் இருந்தாலும்… வசன உச்சரிப்பு இருந்தாலும்… முகத்தில் முதிர்ச்சி, கால மாற்றத்தில் உருமாற்றம்)

அதிரடி ஆக்ஷன்50+ கலாட்டா காமெடி 50 என்று கதை சொல்லி இருக்கிறார்கள்.

சுந்தர் பெயருக்கு பின்னால் இருக்கும் இனிஷியல் போல- சி சென்டர் காமெடி சித்திரம்: கேங்கர்ஸ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *