செய்திகள்

14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல் கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி,பிப்.12

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன் முறையாக 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல் கையாண்டு புதிய சாதனை படைத்தது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு தளம் -8 (தக்ஷின் பாரத் சரக்குபெட்டக முனையம்) மற்றும் சரக்கு தளம்-9 ஆகவற்றின் இத்தகைய மிதவை ஆழம் 31.12.2018 அன்று அறிவிக்கப்பட்டது. இச்சாதனைக்கு வழிவகுத்தது.

எம்.வி. ஸ்பகியா வேவ் என்ற இக்கப்பல் சரக்குதளம் -9-ல் வந்தடைந்தது. சைபரஸ் நாட்டு கொடியுடன் எம்.வி. ஸ்பகியா வேவ் . என்ற இக்கப்பல் 229 மீட்டர் நீளமும் 36.80 மீட்டர் அகலமுடையது. இக்கப்பல் அரபுநாட்டிலுள்ள மினா சக்ர் என்ற துறைமுகத்திலிருந்து 84,502 டன் சுண்ணாம்பு கல்லை சென்னையின் கிழக்கு வர்த்தக நிறுவனத்திற்காக எடுத்து வந்துள்ளது. அக்கப்பலின் முகவர்கள் சீபோர்ட் ஷிப்பிங் மற்றும் ஸ்டிவிடோர் சீபோர்ட் லாஜிஸ்டிக்ஸ் ஆவர். வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இதற்கு முன்பு 28.11.2018 அன்று 14.00 மீட்டர் மிதவை ஆழம் மற்றும் 82,170 டன் சரக்கினை கொண்ட எம்.வி. பாட்டிக்குலி ஜிசிகோ அவினோ என்ற கப்பலை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தா.கீ. இராமசந்திரன், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் 14.20 மீட்டர் மிதவை ஆழம் மற்றும் 84,502 டன்களை கொண்ட இத்தகைய பெரிய கப்பலை கையாளுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக சீபோர்ட் ஷிப்பிங் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்தார்.

மேலும் இவ்வகை அதிக மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாளுவதினால் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு பொருளாதார அளவீடு மேம்படும் வகையில் நிலக்கரி, சுண்ணாம்புக் கல், ராக் பாஸ்பேட் மற்றும் இதர சரக்குகினை கையாளுவதற்கு ஏதுவாக அமையும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 14.20 மீட்டர் மிதவை ஆழமுடைய பொிய கப்பல்களை கையாண்டதன் மூலம் இனி வருங்காலங்களில் துறைமுக உபயோகிப்பாளர்கள் ஊக்கத்துடன் அதிகளவில் இத்தகைய பெரிய பொது சரக்கு மற்றும் சரக்குபெட்டக கப்பல்களை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு நியமனம் செய்ய முடியும்.

மேலும் இத்தகைய அதிக மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாளுவதன் மூலம் அதிவிரைவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு மாற்று முனையமாக திகழும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *