செய்திகள்

14 ந்தேதி சந்திரயான்–3 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ நிறுவனம் தகவல்

ஹரிகோட்டா, ஜூலை 7–

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட உள்ள சந்திரயான்– 3 விண்கலம் வரும் 14-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலம் ஏவப்பட இருக்கிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி பிற்பகல் 2-35 மணிக்கு எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 ஏவப்படுகிறது.

முன்னதாக 2 சந்திரயான்கள்

இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 நிலவில் இறங்கும்போது அதன் ரோவர் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை.

நிலவின் தென் துருவத்திற்கு அருகே லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கி ஆராயும் நோக்கில், சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதை ஏந்திச் செல்லும் எல்.வி.எம் – 3 ராக்கெட் 640 டன் எடையும் கொண்டதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *