செய்திகள்

126 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 1 கோடி கடன் உதவி: அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்

விழுப்புரம், மே 22:

விழுப்புரம் மாவட்டத்தில் 126 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.08 கோடி சிறப்பு கடனுதவியை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

தமிழக அரசு சார்பில் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் சுயகளுக்கு, கொரோனா (கோவிட்-19 )தடைக்கால சிறப்பு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுச் சங்க மண்டல இணைப் பதிவாளர் ஆ.பாலகிருஷ்ணன் வரவேற்றார். சக்கரபாணி எம்.எல்.ஏ, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி ரகுராமன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு 126 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூபாய் 1.08 கோடி மதிப்பில் கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும். இந்தக டனுக்கு 7 சதம் வட்டி வசூலிக்கப்படும். 6 மாதங்களுக்குப் பிறகு தவணைகளில் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். வருகிற செப்டம்பர் 30-–ந் தேதிவரை கடனுதவி வழங்கப்படும். இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும். தகுதியான சுய உதவிக் குழுவினர் கூட்டுறவு வங்கிகளை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *